பிரான்ஸில் மீண்டும் வீதிக்கு இறங்கும் மக்கள் – தயார் நிலையில் 600,000 பேர்

பிரான்ஸில் செவ்வாய்க்கிழமை மீண்டும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இடம்பெற உள்ள ஆர்ப்பாட்டத்தின் போது நாடு முழுவதும் 600,000 பேர் வரை கலந்துகொள்ளலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
உளவுத்துறை வெளியிட்ட தகவல்களின் 400,000 இல் இருந்து 600,000 பேர் வரையும், தலைநகர் பரிசில் மட்டும் 40,000 இல் இருந்து 70,000 பேர் வரை கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் போது பாரிசில் பல்வேறு மெற்றோ நிலையங்கள் மூடப்பட உள்ளன
அதேவேளை, ஓர்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமான சேவைகளில் மூன்றில் ஒன்று தடைப்பட உள்ளதாகவும் அறிய முடிகிறது.
(Visited 10 times, 1 visits today)