பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக ஜேர்மனியில் ஒன்றுக்கூடிய மக்கள்!
காசாவில் பல இன்னல்களை அனுபவித்து வரும் பாலஸ்தீன மக்களுக்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜேர்மனியில் ஒன்றுக்கூடி போராட்டம் நடத்தியுள்ளனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரிய போராட்டக்கார்கள் பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அறிவிக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
மேலும் காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
பேர்லினின் நகர மையப் பகுதி வழியாக நடந்த பேரணியில் சுமார் 50,000 பேர் பங்கேற்றனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. போராட்டக்காரர்களைக் கண்காணிக்க சுமார் 1,800 சட்ட அமலாக்க அதிகாரிகள் களமிறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஜேர்மனி இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விநியோகிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. அத்துடன் இஸ்ரேலுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.





