மெக்சிகோவில் காணாமல்போனவர்களை கண்டுபிடிக்க உதவுமாறு வலியுறுத்தி வீதியில் திரண்ட மக்கள்!

மெக்சிகோவில் கட்டாயமாக காணாமல் போன சம்பவங்களை முன்னிலைப்படுத்தவும், அவற்றைத் தடுக்க அதிகாரிகள் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.
காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மெக்சிகோ நகரம், குவாடலஜாரா, கோர்டோபா மற்றும் பிற நகரங்களின் தெருக்களில் ஊர்வலமாகச் சென்று, நீதி கேட்டு, காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்க உதவுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
மெக்சிகோவில் 130,000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து காணாமல் போன சம்பவங்களும் 2007 ஆம் ஆண்டு முதல் நடந்துள்ளன.
அப்போதைய ஜனாதிபதி பெலிப் கால்டெரான் “போதைப்பொருட்களுக்கு எதிரான போரை தொடங்கினார்.
பல சந்தர்ப்பங்களில், காணாமல் போனவர்கள் போதைப்பொருள் கும்பல்களில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.