சீனாவில் தங்கம் வாங்கி குவிக்கும் மக்கள்!
சீனாவில் தங்க நகை விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
புத்தாண்டு நெருங்கி வருவதால் இவ்வாறு மக்கள் தங்கம் வாங்கி குவிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
சீன நாட்காட்டியின்படி வரும் பத்தாம் திகதி டிராகன் ஆண்டு பிறக்க உள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு தங்கம் வாங்குவதை ஐதீகமாக கொண்ட சீனர்கள், கடந்தாண்டு தங்க விலை சுமார் 17 சதவீதம் அதிகரித்ததால் முதலீட்டு நோக்கில் அதிகளவில் நகைகளை வாங்கி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையினர் அலுவலகங்களில் வழங்கப்பட்ட புத்தாண்டு போனஸில் டிராகன் படம் பொறிக்கப்பட்ட டாலர்கள், தங்க காசுகள், நகைகள் போன்றவற்றை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
(Visited 9 times, 1 visits today)