ஸ்பெயின் மின்தடையால் சுப்பர் மார்க்டெ்களில் பதற்றத்துடன் பொருட்களை எடுத்துச் செல்லும் மக்கள்

ஸ்பெயினிலும் போர்ச்சுகலிலும் நேற்று முன்தினம் ஏற்பட்ட மிக மோசமான மின்தடையால் பல மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்பெயினில் பலரும் பதற்றப்பட்டுப் சுப்பர் மார்க்டெ்களில் அத்தியாவசியப் பொருட்களை முண்டியடித்துக்கொண்டு எடுத்து சென்றுள்ளனர்.
சமூக ஊடகங்களில் அதைக் காட்டும் புகைப்படங்கள் பரவின. நீளமான வரிசைகளையும் காலியான அலமாரிகளையும் படங்களாக எடுத்து மக்கள் இணையத்தில் பதிவு செய்தனர்.
அத்தியாவசியப் பொருள்களில் தண்ணீர் போத்தல்களைத்தான் மக்கள் ஆக விரைவாக வாங்கினர்.
மின்சாரம் மீண்டும் திரும்பிவிட்டது. மின்தடை ஸ்பெயினில் தொடங்கியிருக்கலாம் என்று போர்ச்சுகல் பிரதமர் லூயிஸ் மாண்டனக்ரோ கூறினார்.
அதற்கு ஸ்பானியப் பிரதமர் பெட்ரொ சான்செஸ் மின்தடைக்கான காரணம் என்ன என்பதை விசாரிக்க வேண்டும் என்றும் காரணம் தெரியாதவர்கள் யார் மீதும் பழிசுமத்தக்கூடாது என்றும் கூறினார்.