விமானம் தாமதமானதால் விமானியை தாக்கிய பயணி
13 மணி நேரம் விமானம் தாமதமானதால் பயணி ஒருவர் விமானியை தாக்கிய சம்பவம் இந்தியாவில் இருந்து பதிவாகி வருகிறது.
புதுடெல்லியில் இருந்து கர்நாடக மாநிலம் கோவா செல்லும் இண்டிகோ விமானம் பனிமூட்டம் காரணமாக பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
ஆனால், விமானம் தாமதமானதாக அறிவிக்கும் நேரத்தில் சாஹில் என்ற பயணி, விமானத்தின் துணை விமானியை தாக்கியதுடன், அவர் தாக்குதல் நடத்திய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானி, சம்பந்தப்பட்ட பயணிக்கு எதிராக புகார் அளித்துள்ளதாகவும், விமான நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 13 times, 1 visits today)





