நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது!
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கொழும்பு கோட்டை காவல்துறையினரிடம் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (23) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியதை அடுத்து, கொழும்பு கோட்டை நீதவான் அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் அவர் தற்பொது காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.





