03 ஆம் திகதி கூடுகிறது நாடாளுமன்றம்: முக்கிய விடயங்கள் குறித்து விவாதம்!
மார்ச் மாதத்துக்குரிய முதல் வார நாடாளுமன்ற அமர்வு 03 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதிவரை நடைபெறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு விவாதம் மார்ச் 04ஆம் திகதி நடைபெறும்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சபை ஒத்திவைப்புவேளை மீதான விவாதம் மார்ச் 5 ஆம் திகதி நடைபெறும்.
அதேவேளை, சமகால அரசியல் நிலைவரம் மற்றும் சுரேஷ் சலேவின் கைது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பிலும் சபையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறவுள்ளன.




