கதை திருட்டு புகாரால் ரிலீஸில் சிக்கல் – பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா?
உதவி இயக்குநர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில்: தனது அசல் கதையைத் திருடி, அனுமதி பெறாமல் ‘பராசக்தி’ படத்தை உருவாக்கியுள்ளதாகப் புகார் தெரிவித்துள்ளார்.
முறையான அங்கீகாரம் மற்றும் இழப்பீடு வழங்கும் வரை படத்தின் வெளியீட்டிற்கு தடை (Injunction) விதிக்க வேண்டும் என கோரியுள்ளார்.
இதற்கிடையில் சென்சார் போர்டு (CBFC) கெடுபிடிவேறு
படம் 1960-களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டது. சென்சார் அதிகாரிகள் படத்தின் பல முக்கியக் காட்சிகள் மற்றும் வசனங்களுக்குக் கத்தரி போட்டுள்ளனர்.
படத்தின் ஆன்மாவே அந்தப் போராட்டக் காட்சிகள் தான் என்பதால், படக்குழு அந்த வெட்டுக்களை (Cuts) ஏற்க மறுத்துள்ளது.
தற்போது இப்படம் மறுசீராய்வுக் குழுவிற்கு (Revising Committee) அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் முடிவைப் பொறுத்தே ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும்.
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது அமலாக்கத்துறை (ED) ஏற்கனவே ஒரு விசாரணையைத் தொடங்கி இருந்தது. இது படத்தின் நிதி நிலையைத் தற்காலிகமாகப் பாதித்தது. இருப்பினும், நீதிமன்றத்தின் தலையீட்டால் தற்போது படவேலைகள் தொடர்ந்து வருகின்றன.
இருப்பினும் தற்பொழுது புது பிரச்னையாக கதை திருட்டு வழக்கில் நீதிமன்றம் இன்று (டிசம்பர் 26) மனுவை ஏற்றுக்கொண்டுள்ளது. மீண்டும் படக்குழு இதற்குப் பதில் அளிக்க வேண்டும்.
ஜனவரி 9-ம் தேதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ வெளியாகிறது. அதற்குப் போட்டியாக ஜனவரி 10-ம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பொழுது சென்சார் அனுமதி கிடைத்து, நீதிமன்றத்தில் சுமூகமான தீர்வு எட்டப்பட்டால் மட்டுமே திட்டமிட்டபடி படம் வெளியாகும். இல்லையெனில், சில நாட்கள் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.





