காசா நகரத்தில் உள்ள பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என உத்தரவு!
காசா நகரத்தில் உள்ள பாலஸ்தீனியர்கள் தெற்கே செல்ல வேண்டும் என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய படைகள் நகர்புற பகுதிக்குள் ஆழமாக முன்னேறி வருகின்ற நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இராணுவத்தை அதைக் கைப்பற்ற உத்தரவிட்ட பிறகு, இஸ்ரேலிய படைகள் பல வாரங்களாக வடக்கு நகரத்தின் புறநகர்ப் பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகின்றன.
காசா நகரம் ஒரு ஹமாஸ் கோட்டை என்றும், அதைக் கைப்பற்றுவது பாலஸ்தீன இஸ்லாமிய போராளிகளைத் தோற்கடிக்க அவசியம் என்றும் நெதன்யாகு கூறுகிறார்.
இந்த தாக்குதல் கிட்டத்தட்ட இரண்டு வருட சண்டையிலிருந்து அங்கு தங்கியிருந்த லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களை இடம்பெயர அச்சுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.





