மலேசியாவின் தேசிய தினக் கொண்டாட்டத்தில் பாலஸ்தீனக் கொடிகள்: வெடித்துள்ள சர்ச்சை
கடந்த சில நாள்களாக நடைபெற்ற மலேசியாவின் தேசிய தினக் கொண்டாட்டங்களில் பாலஸ்தீனக் கொடிகள் காணப்பட்டன.அது, பெரும்பான்மை முஸ்லிம்கள் உள்ள அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 11 மாதங்களாக நீடிக்கும் இஸ்ரேல்-காஸா போரில் மலேசியாவில் பாலஸ்தீனர்களுக்குப் பேராதரவு இருந்து வருகிறது.
மலேசியாவின் தேசிய தினம் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதியன்று அனுசரிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 24ஆம் திகதியன்று சிலாங்கூர் காறப்ந்துக் குழுவின் ரசிகர்கள் பாலஸ்தீன கொடியையும் பதாகையையும் ஏற்றினர்.
அந்தப் பதாகையில் பாலஸ்தீன சுதந்திரப் போராளி ஒருவர், மலேசியாவின் நட்சத்திர காற்பந்து வீரர் ஃபைசல் ர்லிம் ஆகியோரின் உருவங்கள் இருந்ததுபோல் தெரிந்தது. புக்கிட் ஜலிலில் உள்ள தேசிய விளையாட்டரங்கில் எஃப்ஏ கிண்ணப் போட்டி இறுதியாட்டம் நடைபெறுவதற்கு முன்பு அந்நிகழ்வு இடம்பெற்றது.
அச்செயல் பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. அதேவேளை, மலேசியாவில் உள்ள அடுக்குமாடி வீட்டுக் கட்டடம் ஒன்றில் ஒவ்வொரு தளத்திலும் மலேசிய தேசிய கொடிக்கு அருகே பாலஸ்தீனக் கொடி தொங்கவிடப்பட்ட காட்சியைக் கொண்ட பதிவு எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதற்கு மாறுபட்ட கருத்துகள் நிலவின.ஆகஸ்ட் 30ஆம் திகதியிலிருந்து அந்தப் பதிவு கிட்டத்தட்ட மூன்று மில்லியன் முறை காணப்பட்டிருக்கிறது. மேலும், அதற்கு சுமார் 1,000 கருத்துகளும் 10,000 லைக்குகளும் குவிந்தன.
மலேசியாவில் ஸ்டார்பக்ஸ், மெக்டோனல்ட்ஸ், கேஎஃப்சி போன்ற பெரிய நிறுவனங்களை சிலர் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். அவை இஸ்ரேலுக்கு நிதி ஆதரவு வழங்கி வருகின்றன என்பது அவர்களின் குற்றச்சாட்டு.
மலேசியாவில் பல்லாயிரக்கணக்கானோர் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளில் பங்கேற்றிருக்கின்றனர். அந்தப் பேரணிகளில் சிலவற்றுக்கு அரசாங்கம் ஏற்பாடு செய்தது.பாலஸ்தீனக் கொடிகளைப் பறக்க விட்டதற்கு இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.