உலகம் செய்தி

மதத்தை அவமதித்த பாகிஸ்தான் மாணவருக்கு மரண தண்டனை

வாட்ஸ்அப் மூலம் அவதூறான செய்திகளை பரிமாறிய குற்றச்சாட்டில் பாகிஸ்தான் மாணவர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (எஃப்ஐஏ) இந்த 22 வயது மாணவருக்கு எதிராக 2022 ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், மேலும் 17 வயதுடைய மற்றொரு மாணவருக்கு இந்த வழக்கு தொடர்பாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

17 வயதுடைய மாணவன் மைனர் என்பதால் அவருக்கு மரண தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடவுள் உள்ளிட்ட நாட்டின் மதத்தை அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொண்டாலோ, அது குறித்து இழிவான கருத்துகளை வெளியிடுவதாலோ மரண தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்த தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக அந்த மாணவர்களின் பெற்றோர் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 13 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி