விமானத்தில் பிச்சையெடுத்த பாக்கிஸ்தான் நபர்
விமானத்தில் பயணித்த பயணிகளிடம் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் பிச்சை கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பணம் கொடுங்கள் என்று விமானத்தில் நடந்து செல்வதையும், கடைசியில் ஒரு விமானப் பணிப்பெண் எதிர்ப்பு தெரிவிப்பதையும் காணமுடிகின்றது.
தாம் பிச்சை எடுப்பதில்லை எனவும், லாகூரில் மதரஸா கட்டுவதற்காக பணம் வசூலிப்பதாகவும் இந்த பாகிஸ்தான் பிரஜை மேலும் தெரிவித்துள்ளார்.
அந்த நபர் வெள்ளை நிற குர்தா பைஜாமா அணிந்து நீல நிற ஜாக்கெட் அணிந்து பணம் கேட்பது போல் தெரிகிறது.
“நாங்கள் ஒரு மதரஸா கட்ட பணம் சேகரிக்கிறோம்,” என்று அவர் விமானத்தில் பயணிகளிடம் கூறுகிறார்.
“நீ கொடுக்க வேண்டுமென்றால் எழுந்து என்னிடம் வரவேண்டியதில்ல. நான் உங்கள் இருக்கைக்கு வருகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
வீடியோ எப்போது படமாக்கப்பட்டது என்பது இன்னும் தெரியவில்லை என்றாலும், இரண்டு வாரங்களுக்கு முன்பு இது ஆன்லைனில் பரவத் தொடங்கியது.
இந்த நபரை பாகிஸ்தானைச் சேர்ந்த இணையத் தொடர்பாளர் அக்தர் லாவா என்று சிலர் அடையாளம் கண்டுள்ளனர்.
தொழிலதிபரும் அரசியல்வாதியுமான லாவா கடந்த ஆண்டு வீடியோக்கள் மூலம் பிரபலமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.