சவுதி அரேபியாவின் உயர்ந்த குடிமகன் விருதைப் பெற்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி
பாகிஸ்தானின்(Pakistan) பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியான ஃபீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீருக்கு(Syed Asim Munir) சவுதி அரேபியாவின்(Saudi Arabia) மிக உயர்ந்த குடிமகன் விருதான மன்னர் அப்துல்அஜிஸ்(Abdulaziz) பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவிற்கான சையத் அசிம் முனீரின் அதிகாரப்பூர்வ விஜயத்தின் போது இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத்(Salman bin Abdulaziz Al Saud) பிறப்பித்த அரச ஆணையின் கீழ் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீரின் தொழில்முறை மற்றும் மூலோபாயக் கண்ணோட்டத்திற்கு சவுதி தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த கௌரவத்திற்காக மன்னர் சல்மான் மற்றும் சவுதி தலைமைக்கு நன்றி தெரிவித்த ஃபீல்ட் மார்ஷல் முனீர், இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த பிணைப்புகளின் பிரதிபலிப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.





