குளிர்காலத்தை இலக்கு வைத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் – எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய இந்தியா
குளிர்காலம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் , ஜம்மு பகுதியில் 30 இற்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தீவிரமாக செயல்படுவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் குளிர்காலத்தை பயன்படுத்தி தீவிரவாதிகள் ஊடுறுவுவதை தடுக்க, பாதுகாப்பு படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
பாதுபாப்பு படைகளின் தீவிர நடவடிக்கைகளால் அதிகரித்து வரும் அழுத்தம் காரணமாக பயங்கரவாதிகள், கிஷ்த்வார் மற்றும் தோடாவில் உள்ள உயரமான மலைப் பகுதிகளுக்குள் நுழைந்துள்ளதாக இந்திய
செய்திகள் தெரிவிக்கின்றன.
குளிர்கால உறைபனியின் காரணமாக அங்கு பொதுமக்கள் இருப்பு குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
உறைபனியை பயன்படுத்தி பயங்கரவாதிகள் உள் நுழைவதை தடுக்க, மலைப்பகுதிகள், காடுகள் மற்றும் தொலைதூர பள்ளத்தாக்குகளில் ராணுவ ரோந்துப் படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.





