ஆஸ்திரேலியா வீரர்களுக்கு பரிசு வழங்கிய பாகிஸ்தான் அணியினர்(காணொளி)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த் நகரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் பாக்சிங் டே என்று அழைக்கப்படும் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 5 மணிக்கு தொடங்குகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படுகிறது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தேவாலயங்கள் முன் பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கப்பட்டிருக்கும்.
ஆலயத்துக்கு வருபவர்கள் அதில் தங்களால் முடிந்த நன்கொடையை செலுத்துவார்கள். மறுநாள் (டிசம்பர் 26-ந்தேதி) பாக்சை பிரித்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை எளியோருக்கு தானமாக வழங்குவார்கள். பாக்சை திறக்கும் நாளை ‘பாக்சிங் டே’ என்று அழைக்கிறார்கள்.
ஆண்டுதோறும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நடைபெறும். இந்த ஆண்டு மெல்போர்னில் நடக்கும் பாக்சிங் டே டெஸ்டில் பாகிஸ்தானுடன ஆஸ்திரேலியா மோதுகிறது.
Warm wishes and heartfelt gifts for the Australian players and their families at the MCG indoor nets 🎁✨ pic.twitter.com/u43mJEpBTR
— Pakistan Cricket (@TheRealPCB) December 25, 2023
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி, கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்துக்கு பரிசு மற்றும் இனிப்பு வழங்கினர்.
அவர்களின் குழந்தைகளுக்கு இனிப்பு கொடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.