IMF இடம் இருந்து மேலும் ஒரு கடனை எதிர்பார்க்கும் பாகிஸ்தான்
பாகிஸ்தானின் பலவீனமான பொருளாதாரத்தை உறுதிப்படுத்த சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) மற்றொரு கடன் திட்டம் தேவை என்று பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் நாட்டில் வரி செலுத்துவோரை ஊக்குவிக்கும் விழாவில் பிரதமர் ஷெரீப் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் ஸ்திரத்தன்மையின் நோக்கத்திற்காக அரசாங்கம் ஒரு புதிய IMF ஒப்பந்தத்தில் நுழைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று பிரதமர் கூறினார்.
இருப்பினும், IMF திட்டத்துடன், வளர்ச்சியை வளர்ப்பதிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், பணவீக்க பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.
மாகாண அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு தனியார் துறைக்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்கி அவர்களின் பிரச்சனைகளை தீர்க்கும் என்று ஷெபாஸ் ஷெரீப் கூறினார்.
ஏற்றுமதியாளர்களுக்கு அறுபத்தைந்து பில்லியன் ரூபாவை திருப்பிச் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், எதிர்காலத்தில் குறித்த பணத்தை மீளப்பெறுவதற்கான உறுதிமொழியை வெளிப்படுத்தினார்.