பாகிஸ்தானும் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது

கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தானும் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது.
அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 19 ரூபாய் உயர்த்த பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே 272.95 ரூபாய் மற்றும் 273.40 ரூபாய் என உயர்த்தப்பட்டதற்கான காரணங்கள் குறித்து பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் தர் தெரிவித்தார்.
எரிபொருள் விலையை உயர்த்துவதற்கு முன்னர் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பாகிஸ்தானில் 11.8 கிலோ கிராம் எடையுள்ள LPG உள்நாட்டு சிலிண்டரின் விலை 281 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
(Visited 14 times, 1 visits today)