இந்திய வீரர்கள் மீது முறைப்பாடு செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் நிர்ணயித்த 128 ரன்களை கடந்து இந்திய அணி எளிதாக வென்றுள்ளது. இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா (13 பந்துகளில் 31 ரன்கள்) வாணவேடிக்கை காட்டினார்.
இதனையடுத்து, கேப்டன் சூர்யகுமார் (41), திலக் வர்மா (31) நிதானமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம், இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டி முடிந்த பிறகு பாகிஸ்தான் வீரர்களுடன் கைகளை குலுக்காமல் வெளியேறியது.
இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. PCB, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் (ACC) அதிகாரப்பூர்வ புகார் அளித்துள்ளது. அதாவது, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி, போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்டை நீக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரியுள்ளது.
இந்த போட்டியில், டாஸ் முடிந்த பின் கேப்டன் சூர்யகுவார் யாதவ், எதிரணி வீரர் சல்மான் அலி ஆகாவுடன் கைகுலுக்கவில்லை. ஆட்டத்தின் முடிவில் இந்திய வீரர்களும் பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்கவில்லை.இதனை தொடர்ந்து சர்ச்சை வெடித்தது.
இதனால், பாகிஸ்தான் அணி நிர்வாகம் இந்த நடத்தையை விளையாட்டின் உணர்விற்கு எதிரானது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து PCB தலைவர் மொஹ்சின் நக்வி தனது எக்ஸ் பக்கத்தில், ”போட்டி நடுவரை உடனடியாக போட்டியில் இருந்து நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோரியுள்ளது என்றும், யுசிசி நடத்தை விதிகள் மற்றும் கிரிக்கெட்டின் உத்வேகம் தொடர்பான எம்சிசி சட்டங்களை போட்டி நடுவர் மீறியதாக பிசிபி ஐசிசியிடம் புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.