மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது
2024-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியாவில் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும்.அதே சமயம் பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் தனிமனிதர்களின் சிறப்பான பணிகளுக்காக வழங்கப்படும் மரியாதைகளின் படிநிலையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
பத்ம விருதுகளில் மூன்று பிரிவுகள் உள்ளன: அவை பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன்.
பத்ம விருதுகளுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ராஷ்டிரபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவிப்பார்.
இந்நிலையில் கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி விஜயகாந்த் காலாமானார்
2024 பத்ம விபூஷன் விருதுகள் வென்றவர்களின் முழுப் பட்டியல்:-
1. திருமதி வைஜெயந்திமாலா பாலி – கலை – தமிழ்நாடு
2. ஸ்ரீ கொனிடேலா சிரஞ்சீவி – கலை – ஆந்திரப் பிரதேசம்
3. ஸ்ரீ எம் வெங்கையா நாயுடு – பொது விவகாரங்கள் – ஆந்திரப் பிரதேசம்
4. ஸ்ரீ பிந்தேஷ்வர் பதக் (மரணத்திற்குப் பின்) – சமூகப் பணி – பீகார்
5. திருமதி பத்மா சுப்ரமணியம் – கலை – தமிழ்நாடு
6. ஸ்ரீ விஜயகாந்த் (மரணத்திற்குப் பின்) – கலை – தமிழ்நாடு
7. ஸ்ரீ ஹோர்முஸ்ஜி என் காமா இலக்கியம் மற்றும் – கல்வி – பத்திரிகை மகாராஷ்டிரா
8. ஸ்ரீ மிதுன் சக்ரவர்த்தி – கலை – மேற்கு வங்காளம்
9. ஸ்ரீ சீதாராம் ஜிண்டால் – வர்த்தகம் மற்றும் தொழில் – கர்நாடகா
10. ஸ்ரீ யங் லியு – வர்த்தகம் மற்றும் தொழில் – தைவான்.