இலங்கை

இன்று ஆரம்பமான ஆயித்தியமலை சதாசகாய மாதா தேவாலயத்தினை நோக்கிய பாதயாத்திரை பயணம்

இலங்கையில் யாத்திரை செல்லுத் திருத்தலங்களில் ஒன்றாகவும் கிழக்கில் பழமையான தேவாலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு ஆயித்தியமலை சதாசகாய மாதா தேவாலயத்தினை நோக்கிய பாதயாத்திரை பல்லாயிரக்கணக்கான அடியார்களுடன் இன்று அதிகாலை ஆரம்பமானது.

வடக்கில் மடுமாதா திருத்தலமும் கிழக்கில் ஆயித்தியமலை சதாசகாய மாதா தேவாலயமும் பக்தர்கள் யாத்திரை செல்லும் திருத்தலங்களாகயிருந்துவருகின்றது.

ஆயித்தியமலை சதாசகாய மாதா தேவாலயத்தின் திருவிழா நடைபெற்றுவரும் நிலையில் இன்று மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் நடாத்தப்பட்ட வழிபாடுகளை தொடர்ந்து பாத யாத்திரை ஆரம்பமானது.

இந்த பாதயாத்திரையானது வவுணதீவு ஊடாக ஆயித்தியமலையினை சென்றடையவுள்ளது.பாதயாத்திரையினை முன்னிட்டு இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டிருந்ததுடன் பாதயாத்திரை செல்வோருக்கான குடிநீர் மற்றும் குளிர்பான ஓழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

நாளைய தினம் ஆயித்தியமலை சதாசகாய மாதா தேவாலயத்தின் திருவிழா கூட்டுத்திருப்பலி ஆயர் பொன்னையா ஜோசப் தலைமையிலும் வத்திக்கான் பாப்பரசரின் இலங்கைகான பிரதிநிதி கர்தினால் பிறைன் உடக்குவேயின் பங்குபற்றுதலுடனும் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்