அமெரிக்காவில் இருந்து தென் கொரியாவுக்கு நாடுகடத்தப்பட்ட 300க்கும் மேற்பட்ட தென் கொரியர்கள்

கடந்த வாரம் ஜோர்ஜியாவில் உள்ள தொழிற்சாலையில் நடந்த குடியேற்ற சோதனையின் போது கைது செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்ட தென் கொரிய தொழிலாளர்கள் தென் கொரியாவுக்குச் செல்லும் விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
தென்கிழக்கு ஜார்ஜியாவில் உள்ள ஒரு தடுப்பு மையத்திலிருந்து அட்லாண்டாவிற்கு பேருந்தில் பயணம் செய்த தொழிலாளர்கள், வெள்ளிக்கிழமை தென் கொரியாவில் தரையிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிகாரிகளால் விடுவிக்கப்பட்ட கைதிகளில் 316 கொரியர்கள், 10 சீனர்கள், மூன்று ஜப்பானியர்கள் மற்றும் ஒரு இந்தோனேசியர் ஆகியோர் அடங்குவர் என்று தென் கொரிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சவன்னாவுக்கு மேற்கே உள்ள ஹூண்டாயின் பரந்த கார் தொழிற்சாலை வளாகத்தில் கட்டுமானத்தில் உள்ள ஒரு பேட்டரி தொழிற்சாலையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனையின் போது கைது செய்யப்பட்ட சுமார் 475 பேரில் இந்த தொழிலாளர்களும் அடங்குவர்.
அவர்கள் அட்லாண்டாவிலிருந்து தென்கிழக்கே 285 மைல் (460 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள ஃபோக்ஸ்டனில் உள்ள குடியேற்ற தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.