Ballon d’Or விருதுகளை வென்ற உஸ்மேன் டெம்ப்லே மற்றும் ஐடானா போன்மதி

வருடந்தோறும் நடைபெறும் கால்பந்து வீரர்களுக்கான பிரபல விருது நிகழ்வான Ballon d’Or இம்முறை பிரான்சின் பாரிஸில் நடைபெற்றது.
2025ம் ஆண்டிற்கான Ballon d’Or நிகழ்வில் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைனின் (PSG) வீரர் உஸ்மேன் டெம்பேலே மற்றும் பார்சிலோனாவின் (FCB) வீராங்கனை ஐதானா போன்மதி ஆகியோர் ஆண்டிற்கான சிறந்த வீரர் விருதை வென்றுள்ளனர்.
கடந்த சீசனில் மூன்று முக்கிய தொடர்களை வென்ற முதல் பிரெஞ்சு அணியாக PSGற்கு உதவிய டெம்பேலே, பார்சிலோனாவின் லாமின் யமலை வீழ்த்தி ஆண்கள் விருதைப் வென்றார்.
ஸ்பெயின் சர்வதேச வீராங்கனை ஐதானா போன்மதி தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக Ballon d’Or விருதை வென்றார்.
ஏனைய விருதுகள்:
இளம் வீரர்கள்: லோபஸ், யமல்
சிறந்த பயிற்சியாளர்கள்: வீக்மேன், என்ரிக்
சிறந்த கோல்கீப்பர்கள்: ஹாம்ப்டன், டோனாரும்மா
அதிக கோல் அடித்தவர்கள்: பஜோர், கியோகெரெஸ்.
பெண்கள் கிளப்: ஆர்சனல்
ஆண்கள் கிளப்: பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன்