சிங்கப்பூரில் 10 ஆயிரம் பேரை பாரிய மோசடியில் இருந்து காப்பாற்றிய அமைப்புகள்
சிங்கப்பூரில் ஏறக்குறைய 10,000 பேர் மோசடிக்கு ஆளாவதை தடுத்து நிறுத்தியுள்ளன.
பொலிஸ் மோசடித் தடுப்பு நிலையமும் 6 வங்கிகளும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் நிலைய அதிகாரிகளும் வங்கிகளும் மோசடிக்கு ஆளாகச் சாத்தியமுடைய சுமார் 9,810 பேருக்குக் கிட்டத்தட்ட 13,900 குறுஞ்செய்திகளை அனுப்பினர்.
அதனால் ஏறத்தாழ 2,805 மோசடிகள் முறியடிக்கப்பட்டன. 47 மில்லியன் வெள்ளி மோசம்போவது தடுத்து நிறுத்தப்பட்டது.
மோசடிக்கு ஆளாகும் சாத்தியமுடையவர்களை அடையாளம் காண Robotic Process Automation (RPA) எனும் புதிய தொழில்நுட்பம் கைகொடுத்தது.
அதன் மூலம் பாதிக்கப்படவிருந்தோரைக் காவல்துறையால் எளிதில் குறுஞ்செய்தி மூலம் தொடர்புகொள்ள முடிந்தது.
(Visited 5 times, 1 visits today)