வரவு செலவு திட்டம் குறித்து மக்களின் கருத்துக்களை கோர தயாராகும் எதிர்கட்சி!
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாளைய தினம் சமர்ப்பிக்கவுள்ள வரவு செலவு திட்டம் குறித்து மக்களின் கருத்துக்களை கோர எதிர்கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைமை கொறடா கயந்த கருணாதிலக, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை oppositionleaderoffice@gmail.com அல்லது WhatsApp 0702067296 என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் எனக் கூறியுள்ளார்.
வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின்போது பொதுமக்களின் கருத்துக்களை நாங்கள் முன்னிலைப்படுத்துவோம்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 3 times, 3 visits today)





