இலங்கை பாராளுமன்றத்தின் சமையலறையை ஆய்வு செய்த எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்!
இலங்கை பாராளுமன்றத்தின் சமையலறையானது நீண்டகாலமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் இருப்பதாக சபாநாயகர் குற்றம் சாட்டியிருந்த நிலையில் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தனா அதனை ஆய்வு செய்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், சமலறையில் சிறிய பழுதுபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ஆறு அடுப்புகள் செயலிழந்துள்ளதாகவும், உறைவிப்பான் அறை புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் “எக்ஸாஸ்ட் ஃபேன்களை மாற்ற வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அனைத்து ஜன்னல்களும் உலோக வலைகள் மற்றும் கண்ணாடிகளால் மூடப்பட்டிருப்பதால், சமையலறை எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கூறியது தவறானது என்று எம்.பி. கூறியுள்ளார்.
(Visited 3 times, 1 visits today)





