பிரித்தானியாவில் நாடாளுமன்றத்தை கலைக்க வாய்ப்பு!! கூட்டாக வலியுறுத்தும் மக்கள்!
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமரிடம் நாடாளுமன்றத்தை கலைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடனடி பொதுத் தேர்தலைக் கோரும் மனுவில் 65,000க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டதை அடுத்து, மேற்படி வலியுறுத்தப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஜுலை மாதம் தொழிற்கட்சி ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் விரைவான தேர்தல் கோரி வாக்கெடுப்பு நடத்தப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
பண்டிகைக் காலத்திற்கு முன்பு குறித்த மனுவில் 10000 பேர் கையெழுத்திட்டிருந்த நிலையில், தற்போது 50000 இற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.
வரும் ஜுன் மாதம் 10 ஆம் திகதிவரை இந்த கையெழுத்து கோரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 01 இலட்சம் பேர் கையெழுத்திடுவார்கள் என நம்பப்படுகிறது.
இந்த அரசாங்கம் செயல்பட்ட விதத்தில் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. தொழிலாளர் கட்சியின் அறிக்கையில் சேர்க்கப்படாத கொள்கைகளால் ஓய்வூதியதாரர்கள் மற்றும் விவசாயிகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“நமது நாடு இப்படியே தொடர முடியாது. நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு இப்போதே பொதுத் தேர்தலை நடத்துங்கள்!” என அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





