கிரீன்லாந்தின் எதிர்காலத்தை டென்மார்க் – கிரீன்லாந்து மட்டுமே தீர்மானிக்க வேண்டும்
கிரீன்லாந்தின் எதிர்காலத்தை கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் மட்டுமே தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு தேவையென அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்ததைத் தொடர்ந்து பிரதமரின் கருத்து வெளியாகியுள்ளது.
அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள், அரை தன்னாட்சி பெற்ற டேனிஷ் பிரதேசமான கிரீன்லாந்தை அமெரிக்காவின் ஒரு பகுதியாக இணைக்கலாம் என்ற கருத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.
இந்த யோசனைக்கு கிரீன்லாந்தின் பிரதமரும் டென்மார்க்கின் பிரதமரும் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த நடவடிக்கை ட்ரம்பின் கற்பனையென கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் ஃபிரடெரிக் நீல்சன் [Jens-Frederik Nielsen] , தெரிவித்துள்ளார்.
இதனிடையே, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், டேனிஷ் இராச்சியத்தில் உள்ள மூன்று நாடுகளில் எதையும் இணைக்க
அமெரிக்காவிற்கு உரிமை இல்லை என கூறியிருந்தார்.





