இலங்கையின் முக்கிய சுற்றுலா இடமொன்றுக்கு வெளிநாட்டினருக்கு மாத்திரமே அனுமதி

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் நிறைவடைந்த பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என சபரகமுவ மாகாண பிரதான சங்கைக்குரிய தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்துள்ளார்.
நல்லதண்ணி பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யாத்திரை காலம் நிறைவடைந்த பின்னர் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் சிவனொளிபாதமலைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், அங்கு இடம்பெறும் சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் விசாகப் பூரணை தினத்துடன் சிவனொளிபாதமலை யாத்திரை காலம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது
(Visited 17 times, 1 visits today)