இணையவழி மோசடி: 50 வெளிநாட்டவர்கள் இலங்கையில் கைது
இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் புத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குழுவில் 44 ஆண்களும் 09 பெண்களும் உள்ளடங்குவதாக பதில் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
புத்தளம் கல்பிட்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தேகநபர்கள் இயங்கி வந்ததாக தெரிவித்த அவர், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய பொலிசார் அந்த ஹோட்டலை சுற்றிவளைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தச் சோதனையின் போது 98 கையடக்கத் தொலைபேசிகள், 44 கணனிகள் மற்றும் பல ஐஎஸ்எம் அட்டைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மேலும் இரு சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்ததுடன் மேலும் ரூ. 10 லட்சம் ரூபாய் பணம். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.