கம்பஹாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி
கம்பஹா – ஜா-எல வீதியின் கிரிந்திவிட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று (26) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜா-எல நோக்கி பயணித்த லொறி ஒன்று, எதிர்த்திசையில் வந்த சிறிய லொறியுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது உயிரிழந்தவர் ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





