இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படோவிட்ட பிரதேசத்தில் இன்று (13) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
படோவிட பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு டி56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
எவ்வாறாயினும், சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் மவுண்ட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
(Visited 26 times, 1 visits today)