இலங்கையில் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழப்பு!

குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட நாட்களின் பின்னர் மற்றுமொரு மரணம் இன்று பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் கொவிட் வைரஸ் தொற்று காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக, நோயாளி சிகிச்சை பெற்ற வோட் தொகுதியில் உள்ள நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது கோவிட் தொற்றுநோய் நிலைமை புறக்கணிக்கப்பட்டபோது மீண்டும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
(Visited 20 times, 1 visits today)