செய்தி

மூளை தின்னும் அமீபாவால் மேலும் ஒருவர் பலி – பாகிஸ்தானில் அதிர்ச்சி

பாகிஸ்தான், காராச்சியில் மூளை தின்னும் அமீபாவால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவர் உள்ளதனை சிந்து சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. உயிரிழந்தவர் காய்ச்சல் மற்றும் தலைவலியால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமீபாவால் கராச்சியில் மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சிந்து மாகாணத்தில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அமீபா உடலுக்குள் மூக்கு வழியாக நுழைந்து மூளைக்குச் சென்று மூளை திசுக்களை அழித்து, மத்திய நரம்பு மண்டலத்தில் தொற்று நோய் ஏற்படுத்தி உயிரை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிந்து மாகாணத்தின் சுகாதாரத்துறை அமைச்சர், ”நன்னீர் ஆகாரங்களில் காணப்படும் இந்த அமீபாவிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், இந்த அமீபா தாக்கம் அரிது என்றாலும் எளிதில் உயிரை பறிக்கக் கூடியது. இதனால் மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

மக்கள் சுத்தம் செய்யப்படாத குளோரினேற்றம் செய்யப்படாத நீச்சல் குளங்களை பயன்படுத்த வேண்டாம்” என அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக மக்கள் மூக்கிற்குள் தண்ணீர் நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி