டெல்லி பொலிஸ் வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு – அதிகாரி கைது

டெல்லி-சரோஜினி நகர் பகுதியில் 58 வயதுடைய நபர் ஒருவர் காவல்துறையின் வாகனம் மோதி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் கவனக்குறைவாக ஓட்டிச் சென்றதால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரோஜினி நகர் காவல் நிலையத்தில் அதிகாலை சம்பவம் தொடர்பான அழைப்பு வந்ததாக காவல்துறை துணை ஆணையர் (தென்மேற்கு) ரோஹித் மீனா தெரிவித்தார்.
டெல்லி போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியதாகவும், ஒருவர் பலத்த காயம் அடைந்ததாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்தது என்று ரோஹித் மீனா தெரிவித்தார்.
விபத்தில் பலியானவர் பைஜ்நாத் என விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
“சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, ராஜிந்தர் காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட குற்றமிழைத்த வாகனத்தின் ஓட்டுநர் கான்ஸ்டபிள் பர்தீப் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று டிசிபி தெரிவித்தார்.
(Visited 15 times, 1 visits today)