வவுனியாவில் வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

வவுனியா பூந்தோட்டம் குடியிருப்பு வீதியில் இன்று (29) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி சென்று கொண்டிருந்த ஹயஸ் வாகனத்துடன் எதிரே வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளும் பெரும் சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை பூந்தோட்டம் குடியிருப்பு வீதியில் மாலை வேளைகளில் அதிகமான வாகனங்கள் பயணித்துவரும் நிலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)