ஐரோப்பா செய்தி

ஒலிம்பிக் – கோகோயின் வாங்கியதாக ஆஸ்திரேலிய ஹாக்கி வீரர் கைது

போதைப்பொருள் விற்பனையாளரிடம் இருந்து கோகைன் போதைப்பொருள் வாங்கியதாக ஆஸ்திரேலிய ஹாக்கி வீரர் டாம் கிரேக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா அணி காலிறுதி போட்டியில் நெதர்லாந்து அணியிடம் தோல்வியடைந்தது.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டதாக பிரான்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீசார் அவரை கைது செய்தபோது ஒரு கிராம் போதைப்பொருள் கையில வைத்திருந்தார். புதன்கிழமை காலை வரை அவரை காவலில் வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாத்திரை வடிவிலான போதைப்பொருள், கோகைன் போதைப்பொருள் வைத்திருந்த 17 வயது விற்பனையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விற்பனையாளரிடம் அதிகப்படியான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் போலீசார் இந்த வழக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்ட டாம் கிரேக், புதன்கிழமை போலீஸ் காவலில் வைக்கப்பட்டார் என்பது ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கமிட்டி பதில் கூற மறுத்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!