ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரித்தானியர்களின் எண்ணிக்கை அதிகாரிப்பு

ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரித்தானியர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் கருவூலத்திற்கான நிதிச் செயலாளர் விக்டோரியா அட்கின்ஸ், செவ்வாய்க் கிழமை காலை கொல்லப்பட்ட பிரித்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உறுதிப்படுத்தினார்.
இறந்தவர்களில் இரண்டு இளைஞர்கள், ஒரு சிப்பாய், விடுமுறையில் இஸ்ரேலுக்குச் சென்றவர்கள் மற்றும் இசை விழா பாதுகாப்புக் காவலர் ஆகியோர் அடங்குவர்.
மற்றும் 6 பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில், பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும்,ஹமாஸ் உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்கவேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு வலியுறுத்தியுள்ளார்.
(Visited 2 times, 1 visits today)