( update) ஒடிஸா மாநில ரயில் விபத்து : பலி எண்ணிக்கை 280 ஐக் கடந்தது!
இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில் 850க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய 2 ரெயில்களிலும் 132 தமிழக பயணிகள் பயணம் செய்துள்ளனர். அவர்களில், 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிக்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைகளில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 70 ஐசியு படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் 50 பேர் கொண்ட மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிஸா மாநில ரயில் விபத்து : உயிரிழந்துள்ள தமிழர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!
சென்னை ஒடிசா மாநிலத்தில் ரயில் விபத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ள தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தழிழக முதலமைச்சர் மு.கா ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேற்று விபத்துக்குள்ளானதில் 280 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் குறித்த விபத்தில் சிக்குண்டவர்களை மீட்;கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.