இலங்கையை விட்டு வெளியேறும் தாதியர்கள் : ஜனாதிபதி வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பு!
இலங்கையில் பயிற்சி பெற்ற 100 தாதியர்களில் 30 தொடக்கம் 40 பேர் வரை நாட்டை விட்டு வெளியேறுவார்கள் எனவும், இது தொடருமானால் நாட்டுக்கு நல்ல நிலைமை இல்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
உலகத்தரம் வாய்ந்த சுகாதார சேவையை கொண்ட இந்நாட்டின் சுகாதார சேவையை மேலும் மேம்படுத்தி நாட்டின் பொருளாதாரத்திற்கு உகந்த வகையில் பங்களிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நெதர்லாந்து அரசாங்கத்தின் DRIVE நிவாரண கடன் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பேதுரு துடுவ ஆதார வைத்தியசாலையின் “விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை” கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறு கூறினார்.
நாட்டின் மருத்துவ மற்றும் தாதியர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வருடாந்த ஆட்சேர்ப்பை அதிகரிக்குமாறும் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும், அதற்கான பயிற்சிக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துமாறும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
போதனா வைத்தியசாலையை நடாத்தும் உரிமை பசுமைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, “லைசியம் வளாகமும்” அத்தகைய கோரிக்கையை முன்வைத்துள்ளது.