இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி
வளமான நாடு – அழகான வாழ்க்கை என்ற தொனிப்பொருளின் கீழ் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்வு கொழும்பில் இன்று இடம்பெற்றது.
34 துறைகளை மையப்படுத்தி இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது\
தலவத்துகொடவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், சுனில் ஹந்துநெத்தி, பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய உட்பட NPP மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (JVP) கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.





