அறிவியல் & தொழில்நுட்பம்

இனி WhatsApp குரூப் உருவாக்க புதிய வசதி

பொதுவாக வாட்ஸ்அப் குரூப் என்பது அதில் சேர்ப்பதற்கு உங்களிடம் ஒரு சில காண்டாக்ட் இருக்கும்போது உருவாக்கப்படுகிறது.

ஆனால், இனியும் அப்படி தேவையில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக வாட்ஸ்அப் தற்போது புதிய ஒரு ஆப்ஷனில் வேலை செய்து வருகிறது. ஆம், காண்டாக்ட், மெம்பர் அல்லது ஃபிரண்ட் போன்றவர்களை சேர்க்காமலேயே உங்களால் வாட்ஸ்அப் குரூப்களை உருவாக்க முடியும்.

முதலில் ஒரு குரூப்பை உருவாக்கி அதன் பிறகு குரூப் லிங்க் அல்லது இன்வைட் மூலமாக பொறுமையாக நபர்களை நீங்கள் ஆட் செய்யலாம். இது ஒரு பெரிய விஷயமா என்று கூட நீங்கள் யோசிக்கலாம். ஆனால், குரூப்களை உருவாக்குவதன் செயல்முறையை சுலபமாக்கி, அதன்பிறகு அதில் மெம்பர்களை சேர்ப்பதை எளிமைப்படுத்துவதற்கு வாட்ஸ்அப் இந்த மாதிரியான அப்டேட்டில் ஈடுபட்டுள்ளது.

இது சம்பந்தமான தகவல்கள் WaBetaInfo மூலமாக கிடைத்துள்ளது. அதில் யூசர்களுக்கு சௌகரியமாக இருக்கும் வகையில் குரூப் சேட்டுகளுக்கான பல்வேறு புதுவிதமான டூல்களை பிளாட்ஃபார்ம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய ஆப்ஷன் வாட்ஸ்அப் 2.25.14.12 ஆண்ட்ராய்டுக்கான பீட்டா வெர்ஷனில் காணப்படுகிறது. கூடிய விரைவில் இது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேட் ஃப்ளோட்டிங் பாக்ஸ் மூலமாக நீங்கள் வாட்ஸ்அப்பில் குரூப்களை உருவாக்கலாம். வழக்கமாக, ஒரு புதிய குரூப்பை உருவாக்குவதற்கு நீங்கள் ஒரு காண்டாக்டை அதில் சேர்க்க வேண்டும். ஆனால், இந்த பீட்டா வெர்ஷனில் அதற்கான தேவை இருக்காது. நீங்கள் மட்டுமே அந்த குரூப்பின் மெம்பராக இருந்து பின்னர் பிற நபர்களை தேவைப்படும்போது அதில் சேர்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு வாட்ஸ்அப் குரூப்கள் பல்வேறு நபர்கள் கொண்ட ஒரு சேட் பாக்ஸாக மட்டுமல்லாமல், வேலை அல்லது குடும்பத்தினரிடமிருந்து கிடைக்கும் மீடியா பைல்கள் மற்றும் டாக்குமெண்ட்களை சேமித்து வைப்பதற்கான ஒரு இடமாகவும் அமைகிறது. இந்த புதிய அப்டேட் மூலமாக வாட்ஸ்அப் குரூப்கள் கிட்டத்தட்ட ‘மெசேஜ் மைசெல்ஃப்’ சேட் ஆப்ஷனைப் போலவே வேலை செய்து மெசேஜ்கள், ஃபைல்கள் மற்றும் லிங்குகளை சேமித்து வைப்பதற்கு உதவுகிறது.

மேலும் AI சேட்டுகளுக்கான பிரைவசி திட்டங்கள் குறித்தும் வாட்ஸ்அப் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதியளித்துள்ளது. உங்களுடைய தகவல்களை பாதுகாப்பாக வைப்பது, கிளவுடில் அவற்றை ப்ராசஸ் செய்யும்போது ஆப்பிள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.

கூடுதல் பிரைவசிக்காக மக்கள் பெரும்பாலும் AI அம்சங்களுக்கு குறிப்பிட்ட அந்த சாதனத்திலேயே பிராசசிங் செயல்முறையை எதிர்பார்ப்பது வழக்கம். எனவே, இதற்காக பிரைவேட் கம்ப்யூட்டிங் கிளவுட் சிஸ்டத்தை அமைப்பதற்கு வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது. இதன் மூலமாக உங்களுடைய டேட்டாக்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்