காயம் காரணமாக முக்கிய தொடரில் இருந்து விலகும் நோவக் ஜோகோவிச்

ATP இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் வரும் 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த போட்டிக்கு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
அதில், காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்க முடியவில்லை. இதனால் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த போட்டியில் ஜோகோவிச், நம்பர் 1 வீரரான சின்னரை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 31 times, 1 visits today)