Apple நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு – iOS செயல்முறையைப் புதுப்பிக்குமாறு கோரிக்கை

Apple நிறுவனம் அதன் கருவிகளில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.
iOS செயல்முறையைப் புதுப்பிக்கும்போது அந்த அம்சங்களை எதிர்பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டித்தன்மைமிக்கச் செயற்கை நுண்ணறிவு யுகத்தில் Apple நிறுவனத்தின் புதிய வளர்ச்சி மிக முக்கியமான தருணத்தில் இடம்பெறுவதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
Google, Microsoft, Amazon, Apple போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ChatGPT முறையைப் போல தகவலளிக்கும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களைப் பயன்படுத்துகின்றன.
இப்போதைக்கு Apple நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும் என Apple நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
(Visited 31 times, 1 visits today)