பாதுகாப்பு குறைபாட்டை ஒப்புக்கொண்ட நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் – விசேட விசாரணை தீவிரம்
சிட்னியின் போண்டாய் கடற்கரையில் ஹனுக்கா கொண்டாட்டத்தின் போது இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு நெறிமுறைகளில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ள நியூ சவுத் வேல்ஸ் அரசு தீர்மானித்துள்ளது.
தாக்குதலுக்கு முன்னர் விடுக்கப்பட்ட மேலதிக பாதுகாப்பு கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதையும், அன்றைய தின பாதுகாப்பு போதுமானதாக இல்லை என்பதையும் முதல்வர் கிறிஸ் மின்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் இத்தகைய இடர்களைத் தவிர்க்க, அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் சமூகப் பாதுகாப்புக் குழுக்களுக்கு (CSG) துப்பாக்கிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குரோனுல்லா கடற்கரையில் இன வன்முறையைத் தூண்ட முயன்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





