பாதுகாப்பு அச்சுறுத்தல் – எல்லைக் கட்டுப்பாடுகளை நீட்டிக்கும் நோர்வே அதிகாரிகள்
நோர்வே அதிகாரிகள் எல்லைக் கட்டுப்பாடுகளை நவம்பர் மாதம் 11ஆம் திகதி வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளனர்.
தேசிய பாதுகாப்புக் கவலைகள் காரணமாக, இந்த நடவடிக்கை எடக்கப்பட்டுள்ளது.
அதன் அண்டை நாடுகளுடனான எல்லைக் கடக்கும் இடங்களில் சீரற்ற பொலிஸ் சோதனைகளை விதித்துள்ளனர்.
இந்தச் செய்தியை நோர்வேயின் நீதி மற்றும் அவசரகாலத் தயார்நிலை அமைச்சர் எமிலி மெஹல் தெரிவித்தார்.
அவர் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்ததால் இந்த நடவடிக்கைக்கு உத்தரவிட்டார், யூத மற்றும் இஸ்ரேலிய மக்கள் குறிப்பாக குறிவைக்கப்பட்டுள்ளனர்.
“எல்லைக் கட்டுப்பாட்டை நவம்பர் 11ஆம் திகதி வரை நீட்டிக்க இப்போது முடிவு செய்துள்ளேன். இது பயணிகளைப் பற்றிய தகவல்களைப் பெறவும், எல்லையில் மேலும் பலவற்றைச் சரிபார்க்கவும் காவல்துறைக்கு அதிக வாய்ப்பை வழங்குகிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக, குறிப்பாக யூத மற்றும் இஸ்ரேலிய நபர்கள் மற்றும் நோர்வேயில் உள்ள நிறுவனங்களுக்கு எதிராக பாதுகாப்பதற்காக இதைச் செய்கிறோம்.” என நீதி அமைச்சர் Emilie Mehl குறிப்பிட்டுள்ளார்.