வடகொரிய இராணுவத்தில் அதிவேகமாக அதிகரிக்கப்படும் அணு ஆயுதங்கள்
வடகொரிய இராணுவத்தில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை ஜனாதிபதி கிம் ஜோங் உன் உறுதி செய்துள்ளார்.
வடகொரியா உருவானதன் 76-ஆவது ஆண்டையொட்டி, தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், நாடு முழுவதும் அணுசக்தி கட்டுமானக் கொள்கை செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வடகொரியா எப்போதும் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவைப்பட்டால் அணு ஆயுதங்களும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.





