போரில் இருந்து வெளியேறிய வடகொரிய வீரர்கள் : தீவிரமாக கண்காணிக்கும் ரஷ்ய போராளிகள்!
உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்து போரிட்ட குழுவொன்று தற்போது முன்வரிசையில் இருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கிரெம்ளின் போராளிகள் அவர்களைக் கண்காணிப்பதாகக் கூறப்படுகிறது.
ரஷ்யாவின் இராணுவம் 3,000 வட கொரிய வீரர்களைக் கொண்ட ஒரு பிரிவை உருவாக்குகிறது என்ற செய்திகளுக்கு மத்தியில், இந்த தகவல் வந்துள்ளது.
துருப்புக்கள் ரஷ்யாவின் குர்ஸ்க் மற்றும் பிரையன்ஸ்க் பிராந்தியங்களில், உக்ரைனின் எல்லையில் இருந்து நான்கு மைல் தொலைவில், அவர்கள் வெளியேறியபோது நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
உளவுத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, ரஷ்ய இராணுவம் இப்போது வட கொரிய வீரர்களைத் தேடுவதாக கூறப்படுகிறது.
பியாங்யாங் கிரெம்ளினுடன் நெருக்கமான இராணுவக் கூட்டணியை உருவாக்குகிறது என்ற கவலைகள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.