அதிநவீன ட்ரோன்கள் சோதனை – முடிவுகளை பார்த்து மகிழ்ச்சியடைந்த வடகொரியா ஜனாதிபதி

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ட்ரோன்களின் சோதனையை வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன், நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களை அரசுத் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
கும்சோங் வகை தாக்குதல் ட்ரோன்கள் மற்றும் உளவு ட்ரோன்களின் சோதனை முடிவுகளில் ஜனாதிபதி கிம் திருப்தி அடைந்துள்ளார்.
மேலும் ஆளில்லா வான்வழி ட்ரோன்களின் திறன்களை செயற்கை நுண்ணறிவு மூலம் மேலும் வலுப்படுத்த உத்தரவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
(Visited 7 times, 1 visits today)