1,587 கிலோமீட்டர் நீளமுள்ள பாதையில் பயணித்து இலக்கை துல்லியமாக தாக்கிய வடகொரிய கப்பல் ஏவுகணை!

வடகொரியா மஞ்சள் கடலில் மூலோபாய கப்பல் ஏவுகணை சோதனை நடத்தியதாக அறிவித்துள்ளது.
இதன்போது அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் இருந்ததாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏவுகணைகள் 130 நிமிடங்கள் பறந்து 1,587 கிலோமீட்டர் நீளமுள்ள பாதையில் பயணித்து, “இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதம் ஏந்திய வட கொரியாவின் எதிரிகளுக்கு “எந்த இடத்திலும் எதிர் தாக்குதல் நடத்தும் திறன் மற்றும் அதன் பல்வேறு அணுசக்தி நடவடிக்கைகளின் தயார்நிலை” குறித்து எச்சரிக்கும் நோக்கில் இந்தப் பயிற்சிகள் நடத்தப்பட்டதாக பியோங்யாங் கூறியது.
பயிற்சியில் கலந்து கொண்ட கிம், “தேசிய இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பது” வட கொரியாவின் அணுசக்திப் படைகளின் பொறுப்பு என்று கூறினார்.
(Visited 3 times, 3 visits today)